இந்திய விமானங்களை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என மாலத்தீவு மந்திரி பேட்டி !!
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாக மோதல் போக்கு நிலவி கொண்டு இருக்கிறது.கடந்த ஆண்டு சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முகம்மது முய்சு அதிபராக பதவியேற்றதில் இருந்தே இந்தியாவுடன் பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறது.
இதனிடையே, தங்கள் நாட்டில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு உத்தரவிட்டது. இந்தியா வழங்கிய விமானத்தை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு ராணுவத்திடம் இல்லை' என அந்நாட்டு பாதுகாப்பு மந்திரி காசன் மவுமூன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகச் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "இந்திய ராணுவத்தால் வழங்கப்பட்ட மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு ராணுவத்தில் யாரும் இல்லை. சில வீரர்கள்
இந்திய விமானத்தை இயக்கும் பயிற்சியைத் தொடங்கி இருந்தனர். இருப்பினும், அவர்கள் பயிற்சியில் பல்வேறு நிலைகளைக் கடக்க வேண்டி இருந்ததால்.. பல்வேறு காரணங்களால் நமது வீரர்களால் அதை முடிக்க முடியவில்லை. இதனால் இந்திய விமானங்களை இயக்கும் லைசென்ஸ் மாலத்தீவு ராணுவத்தில் யாருக்கும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
கடல் சார்ந்த பாதுகாப்பு பணிகளுக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் டோர்னியர் ரக போர் விமானத்தை மாலத்தீவுக்கு இந்தியா பரிசாக அளித்து இருந்தது. மாலத்தீவில் முகாமிட்டு இருந்த இந்திய ராணுவ வீரர்கள், போர் விமானத்தை இயக்கும் பயிற்சியை மாலத்தீவு வீரர்களுக்கு அளித்து வந்தனர்.