மணிப்பூர் செல்ல வேண்டாம் .. அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு !
மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லைகள், நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியான ஜம்மு மற்றும் காஷ்மீரில் நக்சலைட்டுகள் புழக்கம் அதிகளவில் இருப்பதால் அமெரிக்க அரசு இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
''இந்த பகுதிகள் கிழக்கு மகாராஷ்டிரா மற்றும் வடக்கு தெலுங்கானாவிலிருந்து மேற்கு மேற்கு வங்கம் வரை நீண்டுள்ளது. அமெரிக்க அரசு ஊழியர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல சிறப்பு அங்கீகாரத்தைப் பெற வேண்டும். வன்முறை மற்றும் குற்ற அச்சுறுத்தல் காரணமாக மணிப்பூருக்குப் பயணிக்க வேண்டாம். அமெரிக்க அரசு ஊழியர்கள் மணிப்பூருக்குச் செல்வதற்கு முன் அனுமதி தேவை.
தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் பகுதியில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு எதிரான தாக்குதல்கள் அவ்வப்போது நிகழ்கின்றன.
இந்தியாவில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களில் கற்பழிப்பு முதன்மையாக உருவெடுத்து வருகிறது. வன்முறை சம்பவங்கள், பாலியல் அத்துமீறல்கள் சுற்றுலா தலங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருகிறது." என அமெரிக்க அரசு இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது.