பசியால் வதையும் பாலஸ்தீன மக்கள்!

Update: 2024-03-21 11:26 GMT

பசியால் வதையும் பாலஸ்தீன மக்கள்

பாலஸ்தீனம் மீதான போரில், பட்டினியை ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாக ஐநா குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஹமாஸ் படையை ஒழிக்கும் வரை போர் தொடரும் என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டு மக்களே இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு தற்போது வரை அமெரிக்கா ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது.

ஏவுகணைகள் பீரங்கி குண்டுகளால் பலர் கொல்லப்பட்டாலும் தற்போது சர்வதேச நாடுகள் அனுப்பிய உணவு மருந்து பொருட்கள் ஆகியவை எகிப்தின் ராஃபா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போரில் பட்டினியை இஸ்ரேல் ஆயுதமாக பயன்படுத்துவதாக ஐநா தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News