கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு மேலும் விசா கட்டுப்பாடு!!

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

Update: 2024-09-19 13:01 GMT

canada student

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கனடாவில் இந்திய மாணவர்கள் உள்பட வெளிநாட்டு மாணவர்கள் ஏராளமானோர் உயர்கல்வி படித்து வருகிறார்கள். அதேபோல் வெளிநாட்டை சேர்ந்த பலர் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கை கணிசமான அளவு குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஒரு பகுதியாக வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதாக அரசு அறிவித்துள்ளது. கனடாவில் 2023-ம் ஆண்டு 5.09 லட்சம் பேருக்கும், 2024-ம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் 1.75 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போதைய கட்டுபாட்டால் 2025-ம் ஆண்டு வழங்கப்பட்ட வெளிநாட்டினருக்கு எண்ணிக்கையை 4.37 லட்சமாக குறைக்கும். கனடாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். சர்வதேச மாணவர் அனுமதிகளைக் குறைக்கும் கனடா அரசாங்கத்தின் நடவடிக்கையால் இந்திய மாணவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை தேர்ந்தெடுக்கும் சூழல் உள்ளது. 

Tags:    

Similar News