காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த வேண்டாம் - அமெரிக்கா வேண்டுகோள்

Update: 2023-10-14 05:39 GMT

காசா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இஸ்ரேல் கொடுத்த 24 மணிநேர காலக்கெடு நிறைவடையும் நிலையில், வான்வழி தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பாதுகாப்பு வழித்தடங்கள் ஏற்படுத்தும் வரை காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த வேண்டாம் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் காணாமல் போன இஸ்ரேலியர்கள் சிலரின் உடல்கள் காசாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பினரால் ஒரு வாரத்திற்கு முன்பு சிறை பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் மற்றும் மீட்கப்பட்ட உடல்கள் இஸ்ரேலுக்கு கொண்டு வரப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News