புதிய விதிமுறை கட்டுப்பாட்டினை அமலுக்கு கொண்டு வந்த வடகொரியா... அதிபர் கிம் ஜாங் உன் போட்ட வினோத ரூல்ஸ் !!
வடகொரியாவில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வடகொரியா முழுவதும் புதிய விதிமுறை ஒன்றை அதிபர் கிங் ஜாங் உன் அமல் படுத்தி உள்ளார். பெண்கள் இனி லிப்ஸ்டிக் போடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளார்.
கொரியா தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடு வடகொரியா இந்த நாட்டின் தலைவராக கிம் ஜாங் உன் உள்ளார். அதிபர் ஆட்சி நடைபெறும் வட கொரியா ஒரு கம்யூனிச நாடு என்று சொல்லப்பட்டாலும் தற்போது சர்வதிகார ஆட்சியை நடைபெற்று வருகிறது. வடகொரியாவின் அதிபர் சர்வதேச நாடுகளுடன் மோதல் ஒரு பக்கம் என்றால் உள்நாட்டில் பல விசித்திரமான கட்டுப்பாடுகளை விதித்து வடகொரியாவை பெரிய இரும்புத்திரை கொண்டு மூடி வைத்திருக்கிறார்.
கிம் ஜாங் உன் அதாவது வெளி உலகத் தொடர்பு எதுவும் இன்றி திறந்தவெளி சிறை போல வடகொரியா மக்கள் வாழ்ந்து வரும் அளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். மேற்கத்திய நாட்டு படங்களை பார்க்க தடை, சிகை அலங்காரத்திற்கு தடை, என பலவிசித்திரமான கட்டுப்பாடுகள் உண்டு இந்த கட்டுப்பாடுகளை மீறினால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு கொடூரமான தண்டனை வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
மக்கள் எப்படி உடை அணிந்து கொள்ள வேண்டும் எப்படி முடிவெட்டிக் கொள்ள வேண்டும் என்பது வரைக்கும் அங்கு கட்டுப்பாடுகள் உள்ளது. இந்நிலையில் புதிய கட்டுப்பாடு ஒன்றை வடகொரியாவில் விதித்து இருக்கிறார். கிங் ஜாங் உன் வடகொரியா மக்கள் சிவப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்யூனிச வண்ணத்தை பிரதிபலிப்பது என்றாலும் கூட முதலாளித்துவத்தின் அடையாளமாக சிவப்பு நிறம் இருப்பதாக கருதுகிறார்.
அது மட்டும் இன்றி ரெட் லிப்ஸ்டிக் பூசுவது மிகவும் கவர்ச்சியாக இருக்கும் என்றும் எளிமையாகவும் அடக்கமாகவும் இருக்க வேண்டும் இப்போது தடை விதிக்கப்பட்டாலும் ப்ளு மற்றும் தோல் நிறத்திலான ஜீன்ஸ் குறிப்பிட்ட ஹேர் ஸ்டைல் வைக்க தடை என பல கட்டுப்பாடுகளை அந்த நாட்டு மக்களுக்கு விதித்துள்ளது.
இந்த விதிகளை மீறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் அல்லது பொது இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் அத்தகைய ஆடையை அணிய முடியாதவாறு கிழித்து விடுவோம் என தண்டனை அறிவித்திருக்கிறது.