இனி நாங்கள் 'மெலோடி' - இத்தாலி பிரதமரின் வைரல் வீடியோ!

Update: 2024-06-15 08:41 GMT

 ஜியார்ஜியா மெலோனி - மோடி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

"இனி நாங்கள் மெலோடி" என பிரதமர் மோடி உடனான செல்ஃபி வீடியோவை பகிர்ந்து இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி பதிவிட்டுள்ளார்.

இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நேற்று நடைபெற்ற கருத்தரங்கு நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடியுடன் ஜியார்ஜியா செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

அந்த செல்ஃபி வீடியோவை இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி பகிர்ந்து இனி நாங்கள் 'மெலோடி டீம்' என குறிப்பிட்டிருந்தார்.

இருவரின் பெயர்களிலும் உள்ள எழுத்துகளை ஒன்றிணைத்து மெலோடி டீம் என குறிப்பிட்டுள்ளார் ஜியார்ஜியா மெலோனி.

Tags:    

Similar News