ஓமன் கடல் எண்ணெய் கப்பல் விபத்து ; இந்தியர் சடலமாக மீட்பு - 7 பேரை தேடும் பணி தீவிரம் !!!

Update: 2024-07-19 04:47 GMT
ஓமன் கடல் எண்ணெய் கப்பல் விபத்து ; இந்தியர் சடலமாக மீட்பு - 7 பேரை தேடும் பணி தீவிரம் !!!

எண்ணெய் கப்பல் விபத்து

  • whatsapp icon

ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் எட்டு இந்தியர்கள் உட்பட ஒன்பது பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் காணாமல் போன ஐந்து இந்தியர்கள் உட்பட ஏழு பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

ஓமன் நாட்டுக்காக கடல் பகுதியில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் 13 இந்தியர்கள் மற்றும் மூன்று இலங்கையைச் சேர்ந்த மாலுமிகள் என மொத்தம் 16 பேர் இருந்தனர்.

இந்தக் கப்பல் ஓமன் நாட்டின் ராஸ் மத்ரகா கடற்கரையில் இருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவுக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென கப்பல் விபத்துக்குள்ளானது.

இதில் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் கடலில் மூழ்கினர். தகவல் அறிந்த ஓமன் கடலோர காவல் படையினர் விபத்தில் சிக்கிய ஒன்பது பேரை பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் இதில் எட்டு பேர் இந்தியர்கள் என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து மீதமுள்ள ஐந்து இந்தியர்கள் உட்பட ஏழு பெயரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் ஒரு இந்தியர் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து மீதமுள்ள 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News