பாகிஸ்தான் பழங்குடி மக்கள் வன்முறை - 36 பேர் பலி !!
வடகிழக்கு பாகிஸ்தானில் பழங்குடி மக்கள் வன்முறையில் 36 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் பழங்குடியினர் அதிகம் வாழும் மேல் குர்அம் மாவட்டத்தில் உள்ள போஷேரா கிராமத்தில் கடந்த 5 நாட்களாக மோதல்கள் நடத்து வருகின்றது.
இஸ்லாமின் ஷியா பிரிவை பின்பற்றும் பழங்குடியினருக்கும் சன்னி பிரிவைப் பின்பற்றும் பழங்குடியினருக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளன.
சமீபத்தில் அரசு நடத்திய பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் திரும்பிய நிலையில் போஷேரா கிராமத்தில் கடந்த 4 நாட்கள் முன் நிலத்தகராறு காரணமாக மீண்டும் இரு குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
துப்பாக்கிகள், ராக்கெட் லான்சர்கள் என நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி மோதல் ஏற்பட்டதால் வன்முறை கடுமையாக வெடித்தது.இந்த தாக்குதல்களில் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 162 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வன்முறையானது மேல் குர்அம் மாவட்டத்தில் மற்ற பகுதிகளுக்கும் பரவி உள்ளதால் நிலைமையை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.