யூத நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் - 7 பேர் கைது
Update: 2023-12-15 06:10 GMT
கடந்த அக்.7-ம் தேதி இஸ்ரேல் மீதுஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஐரோப்பாவில் உள்ள யூத நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக டென்மார்க், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஹமாஸ் உறுப்பினர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.