பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.0 ஆக பதிவு!!
பப்புவா நியூ கினியாவில் இன்று இந்திய நேரப்படி மதியம் 2.11 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.;
By : King 24x7 Desk
Update: 2024-09-19 12:56 GMT
நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவில் இன்று இந்திய நேரப்படி மதியம் 2.11 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 195.3 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 5.49 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 147.52 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆனால் பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற பாதிப்புகள் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.