ஹெலிகாப்ட்டர் விபத்தில் மரணமடைந்த அதிபர் - ஈரான் மக்கள் கொண்டாட்டம் ...!!!
ஈரான் அதிபர் ரைசி மரணத்தால் அந்நாட்டு மக்களில் ஒரு தரப்பினர் சோகத்தில் இருந்தாலும் மற்றொரு தரப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். ஒரு அதிபரின் மரணத்தை சொந்த நாட்டு மக்களை கொண்டாடுவது என்ன காரணமாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
ஈரான் நாட்டின் அதிபரான இப்ராஹிம் ரைசி ஆஜர்பைஜான் சென்று விட்டு திரும்பிய நிலையில் அப்போது எதிர்பாராத விபத்தில் அவர்கள் ஹெலிகாப்டர் மழையில் மோதிய நிலையில் இப்ராஹிம் ரைசி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஈரான் நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஒரு தரப்பினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் இப்ராஹிம் ரைசின் மரணத்தை கொண்டாடி வருவது சமூக வலைதள பதிவுகளில் பார்க்க முடிகிறது.
ஈரான் நாட்டை சேர்ந்த சிலர் உலக ஹெலிகாப்டர் தின வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். விபத்து பற்றிய செய்திகள் வெளியான போது இப்ராஹிம் ரைசி பாதுகாப்பாக இருக்க வேண்டுமென தெஹ்ரான் மற்றும் மஷாத் நகரின் முக்கிய சதுக்கங்களில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடினர்.
அதேநேரம் 1000 ஈரானியர்கள் இந்த செய்தியை கொண்டாடுவதையும் காணமுடிந்தது. இந்த ஈரான் நாட்டை சேர்ந்த மக்கள் வெளிப்படையாகவே தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். சில இடங்களில் பட்டாசு கூட வேடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிபர் பதவியில் இருக்கும் ஒருவர் விபத்தில் உயிரிழந்ததை கண்டு ஏராளமான மக்கள் கொண்டாடுவது பற்றி நமக்கு பல கேள்விகள் எழலாம். அதற்குக் காரணம் 63 வயதான ரைசியை பலரும் ஈரான் நாட்டின் கொடூர கொலைகாரர் இன்று அழைக்கின்றார்கள். ஏனென்றால் 1988ல் ஈரான் ஈராக் போருக்கு பின் அரசியல் கைதிகள் பலர் தூக்கிலிடப்பட்டதில் இவருக்கும் முக்கிய பங்கு இருப்பதாக குற்றச்சாட்டப்படுகிறது.
சுமார் 5000 கைதிகளின் மரண தண்டனைக்கு இவர் காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது 2021ல் ஈரான் அதிபராக பொறுப்பேற்ற ரைசி உடனடியாக கலாச்சார சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. மேலும் போராட்டக்காரர்கள் ஒடுக்கப்பட்டன. தீவிர வலது சரியான ரைசின் பேச்சு சுதந்திரத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
மேலும் ஹிஜாப் உள்ளிட்ட கலாச்சார சட்டங்களை கடுமையாக்கி அதை கண்காணிக்க கலாச்சார காவலர்களை நியமித்தார். 2022 இல் ஈரான் நாட்டின் மாஷா அமினி என்ற 22 வயது பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று அந்நாட்டின் கலாச்சார காவலர்களால் அடித்தே கொல்லப்பட்டார்.
இதை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்த நிலையில் அதையும் அடக்குமுறை மூலமாக ஒதுக்கினார்கள். அதில் பல நூறு பேர் கொல்லப்பட்டனர். பல்லாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாகவே ஈரான் நாட்டிலேயே ஒரு தரப்பினர் இவரது மரணத்தை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக அந்தப் பெண்ணின் மரணத்தை தொடர்ந்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இவரது மரணத்தை கொண்டாடும் வகையில் போட்டோக்களை பதிவிட்டுள்ளனர்.