ரூ. 17.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நெப்போலியன் தொப்பி!

Update: 2023-11-20 15:32 GMT

நெப்போலியன் தொப்பி!

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சாயம்போன, விரிசல் கண்ட இரு முனைத் தொப்பியொன்றை ரூ. 17.5 கோடி கொடுத்து ஏலம் எடுத்திருக்கிறார் ஒருவர்!

தொப்பிக்கு அல்ல மதிப்பு, அதை யார் அணிந்திருந்தார் என்பதால்தான் இருக்கிறது மதிப்பு – பிரெஞ்சுப் பேரரசன் நெப்போலியன் போனபார்ட்! ஆம், 21 லட்சம் டாலர் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட அந்தத் தொப்பியை அணிந்திருந்தவர் மாவீரன் நெப்போலியன்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்ஸை ஆட்சி செய்துகொண்டு ஐரோப்பாவில் பெரும் வெற்றிகளைப் பெற்ற காலத்தில் பேரரசன் நெப்போலியன் அணிந்திருந்த தொப்பி இது. நெப்போலியன் அணிந்திருந்த உடைமைகள் சிலவற்றில் இதுவும் ஒன்று.

கடந்த ஆண்டு இறந்துவிட்ட பிரான்ஸ் தொழிலதிபர் ஒருவரின் சேகரிப்பிலிருந்த இந்தத் தொப்பி உள்ளிட்ட நெப்போலியன் தொடர்பான சில அரும்பொருள்கள், பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் நெப்போலியன் தொப்பிதான் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

Tags:    

Similar News