விரைவில் இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்!!

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வர உள்ளார் என கிரெம்ளின் அரண்மனை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-11-19 12:50 GMT

புதின்

ரஷியா- உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷியா படையில் வடகொரிய ராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் ரஷியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கேட்டிருந்தது. உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏவுகணைகளை பயன்படுத்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது. இதனால் தற்போது இருப்பதை விட சர்வதேச அளவில் பதற்றத்தை இந்த நடவடிக்கை இன்னும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வர உள்ளார் என கிரெம்ளின் அரண்மனை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். மேலும், அதிபர் புதின் இந்தியா வரும் தேதிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News