புதன் கிரகத்தில் வைரம் இருப்பதாக சீனா, பெல்ஜியம் விஞ்ஞானிகள் தகவல் !!

Update: 2024-07-25 06:34 GMT

புதன் கிரகம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நமது சூரியகுடும்பத்தின் முதலாவது கிரகம் புதன் ஆகும். 3-வதுஇடத்தில் உள்ள பூமிக்கு அருகில் உள்ளது. இந்நிலையில், சீனா மற்றும் பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புதன்கிரகத்தில் படிந்துள்ள வைரங்கள்பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

இந்நிலையில், புதன் கிரகத்திற்குள் மிக அதிக அளவில் வைரம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.

புதன் கிரகத்தில் மேற்பரப்பில்கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இவற்றுக்கு அடியில் வைர அடுக்குகள் இருக்க வாய்ப்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது 9 மைல் (14 கி.மீ.) தடிமனில் இருக்கும் என விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சுலபமாக அங்குள்ள வைரத்தைவெட்டி எடுக்க சாத்தியம் இல்லை. நாசாவின் மெசஞ்சர் விண்கலம் முதல் முறையாக புதன் கிரகத்துக்கு சென்று ஆய்வு செய்த நிலையில் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுக்கு பயன்படுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News