விண்வெளி மகிழ்ச்சியான இடம்: சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளி மகிழ்ச்சியான இடம் என அமெரிக்க வாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-14 07:00 GMT

sunitha williams

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அமெரிக்க வாழ் இந்திய விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளார். கடந்த ஜூன் 5-ந்தேதி தனியார் நிறுவனமான போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளி சென்றார். 8 நாட்களில் பூமிக்கு திரும்புவதாக இருந்தது. ஸ்டார்லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக திரும்ப முடியாமல் போனது. இதனால் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்ப உள்ளார். இந்த நிலையில் விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ மூலம் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது என்னுடைய மகிழ்ச்சியான இடம். விண்வெளியில் இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். 8 நாட்களில் பூமிக்கு திரும்பிய உடன் சில திட்டங்கள் வைத்திருந்தார். என்னுடைய தாயார் உடன் நேரம் செலவழிவிட வேண்டும் போன்ற திட்டங்கள் இருந்தது. குளிர்காலத்திற்கான திட்டங்கள் இருந்தது. ஆனால், எல்லாமே தற்போது விண்வெளி நிலையத்தில்தான். அதற்காக நாங்கள் தயாராகிவிட்டோம். நாங்கள் எல்லோரும் அமெரிக்க குடிமகன்கள். அதனால் அதிபர் தேர்தலில் வாக்களிப்பது முக்கியமான பணி. இதற்கான பணியை நாசா எங்களுக்காக எளிதாக்கியுள்ளது. நாங்கள் விண்வெளியில் இருந்து வாக்களிப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது மிகவும் அருமையானது என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News