மணிப்பூர் முதல்வர் மீது துப்பகிசூடு தாக்குதல் !
Update: 2024-06-10 10:04 GMT
முதல்வர் பைரன்சிங்
மணிப்பூர் - ஐரிபாம் என்ற இடத்தில் முதல்வர் பைரன்சிங்-ன் பாதுகாப்பு வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.இது பயங்கரவாதிகளின் சதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் படுகாயமைடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரண்டு காவல் சோதனை சாவடிகள், வனத்துறை அலுவலகம் மற்றும் 70 வீடுகளை போராட்டக்காரர்கள் எரித்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது முதல்வரின் பாதுகாப்பு படை வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருப்பது மணிப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.