இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!!
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.;
By : King 24x7 Desk
Update: 2024-09-21 13:55 GMT
presidential election
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதனைத் தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. தேர்தலுக்காக மொத்தம் 13,400 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், வாக்குப்பதிவு 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.