விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்!

Update: 2024-06-25 09:50 GMT

சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விண்வெளிக்கு பயணிகளை அனுப்பும் சோதனை முயற்சியாக, போயிங் நிறுவனமும் நாசாவும் இணைந்து, இரண்டு விண்வெளி வீரர்களை Starliner என்னும் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ளன. இந்திய வம்சாவளியினரான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (வயது 61) ஆகியோர் ஜூன் 5ம் தேதி பயணம் மேற்கொண்டனர்.

இருவரும் திட்டமிட்டப்படி ஜூன் 22ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். சுனிதாவும் வில்மோரும் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயுக்கசிவு இருப்பது தெரியவந்துள்ளதாலேயே அவர்கள் பூமிக்குத் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவென்றால், இந்த கசிவு குறித்த உண்மை நாசாவுக்கும் போயிங் நிறுவனத்துக்கும் ஏற்கனவே தெரியுமாம். சுனிதா வில்லியம்ஸை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா கோரலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News