மும்பையை புரட்டி எடுத்த புழுதி புயல்..!
Update: 2024-05-14 05:43 GMT
மும்பை காட்கோபர் பகுதியில் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மலையும் அதன் பிறகு சில நிமிடங்களில் புழுதிப்புயல் 50 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் வீசி உள்ளது.
பலத்த காற்றால் சுமார் 70 முதல் 100 அடி உயரம் கொண்ட பேனர் பெட்ரோல் பங்க் மற்றும் அருகில் உள்ள வீடுகளின் மேல் விழுந்ததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மழை மற்றும் புயல் காரணமாக மக்கள் பெட்ரோல் பங்க் அருகே ஒதுங்கியுள்ளனர். இந்த ராட்சத பேனர் பெட்ரோல் பங்க் மீது விழுந்ததால் பலரும் காயமடைந்துள்ளனர்.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விமான சேவை மற்றும் உள்ளூர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. மேலும் மீட்பு பணிகள் இரவு முழுவதும் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.