மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம்!

Update: 2024-08-01 09:30 GMT
மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம்!

இஸ்மாயில் ஹனியே

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நேரடி ராணுவ தாக்குதல் நடத்த ஈரான் உயர் தலைவர் அலி காமெனி உத்தரவிட்டுள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழந்ததால் போர் பதற்றம் நிலவியுள்ளது.

இதனிடையே, இந்திய குடிமக்கள் லெபனான் நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, வான்வழி தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் இறுதிச் சடங்கு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்று வருகிறது.

இறுதிச் சடங்கில் ஈரான் உயர் தலைவர் அலி காமெனி மற்றும் அதிபர் மசூத் பெஜஷ்கியான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Tags:    

Similar News