ஜப்பான் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!!
ஜப்பான் நாட்டில் தீவுகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
By : King 24x7 Desk
Update: 2024-09-24 09:20 GMT
நிலநடுக்கம்
ஜப்பான் நாட்டில் தீவுகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தெற்குப் பகுதியில் மிக நெடுந்தூரத்தில் உள்ள தீவுகளில் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் மீட்டர் உயர்ம் வரை ஆர்ப்பரித்து தாக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஐஜு தீவுகளில் கடற்கரை வீடுகளில் உள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.