உலகின் மிகப்பெரிய ஐபோனை உருவாக்கிய யூடியூபர்!!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் யூடியூபர் உலகின் மிகப்பெரிய ஐபோனை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் யூடியூபர் உலகின் மிகப்பெரிய ஐபோனை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். உலகின் மிகப்பெரிய ஐஃபோன் மாதிரியை உருவாக்கியவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ள இவர், இங்கிலாந்தைச் சேர்ந்த அருண் ரூபேஷ் மைனி. "MrWhoseTheBoss" என்ற டெக் யூடியூப் சேனலை வைத்துள்ள இவர், 6.74 அடி உயரத்தில் IPHONE 15 PRO MAX-ன் மாதிரியை வடிவமைத்துள்ளார். இதனை உருவாக்க சுமார் ரூ.59 லட்சம் வரை செலவானதாகவும், ஓராண்டு எடுத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார். மைனி, தனது நுண்ணறிவுமிக்க தொழில்நுட்ப மதிப்புரைகளுக்காகப் பெயர்பெற்றவர். இந்த லட்சிய சாதனையை படைக்க, DIYPerks-ன் மூளையாக இருந்த மேத்யூ பெர்க்ஸுடன் அருண் மைனி இணைந்தார். கின்னஸ் உலக சாதனை படைத்த மைனி கூறுகையில், "இது ஒரு முழு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தருணமாக உணர்கிறது. இதுவரை செய்யாத ஒன்றைச் செய்ததற்காக எங்கள் அணி மற்றும் மேட் இருவரையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். வளரும்போது, கின்னஸ் உலக சாதனைப் புத்தகங்களில் என்னை நான் இழந்துவிடுவேன், எனவே இப்போது ஒன்றை வைத்திருப்பது முற்றிலும் சர்ரியலாக உணர்கிறேன்" என்றார்.