- Home
- /
- ஷாட்ஸ்

உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெளியேறினார். 84.03 மீட்டர் தூரம் அதிகம் வீசிய நிலையில் 8ஆவது இடம் பிடித்து நீரஜ் சோப்ரா வெளியேறினார். இறுதிப் போட்டிக்கு 6 பேர் தகுதி பெறும் நிலையில் 8ஆம் இடத்தை பிடித்ததால் நீரஜின் பதக்க வாய்ப்பு பறிபோனது. நீரஜ் சோப்ரா பதக்க வாய்ப்பை இழந்த நிலையில் பதக்க வாய்ப்பில் சச்சின் யாதவ் நீடிக்கிறார். ஜப்பானின் டோக்கியோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் 20 ஆவது சீசன் போட்டிகள் நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கனமழைக்கு வாய்ப்பு. 7 முதல் 11 செமீ வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் செப் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தலைவர் பதவியில் இல்லாத ஒருவரின் குழுவுக்கு கட்சி அங்கீகாரம், சின்னம் ஒதுக்கியிருப்பது ஏற்புடையதல்ல எனவும் உரிய விசாரணை அடிப்படைக்கு பிறகு அங்கீகாரம் வழங்கவேண்டும் எனவும் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு புகார் அளித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையரை, பாமக எம்.எல்.ஏ. அருள், பொதுச்செயலாளர் முரளி சங்கர் ஆகியோர் சந்தித்து புகார் அளித்துள்ளனர்.

2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைவது உறுதி என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். "நேற்று வீரவசனம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இப்போது அமித் ஷாவை சந்தித்துள்ளார். அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி முகத்தை மூடிகொண்டு வரவேண்டிய அவசியம் என்ன?. இன்று முதல் எடப்பாடி, முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார். 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைவது உறுதி" என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து 165 பயணிகளுடன் பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இன்று (செப்.17) நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர். உடனடியாக விமானி, விமானத்தை சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். விமானியின் இந்த சாமர்த்தியத்தால் அதில் பயணித்த 165 பயணிகளும் எந்த அசம்பாவிதமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை தொடர்ந்து மாறிக் கொண்டே வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் அதிகபட்சமாக மாத இறுதியில் ரூ.76 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இந்த சூழலில் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ,82,240க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று(செப். 17) சவரனுக்கு ₹80 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹10,270-க்கும், சவரன் ₹82,160-க்கும் விற்பனையாகிறது. நேற்று(செப்.16) சவரனுக்கு ₹560 அதிகரித்திருந்த நிலையில், இன்று சரிவைக் கண்டுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக 5% ஜிஎஸ்டி ஏன் நியாயமாகவும் பொருத்தமாகவும் உங்களுக்கு இல்லை? என ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். தற்போது 5% ஜிஎஸ்டி என்பது நியாயமான, பொருத்தமானதாக இருக்கிறது என்கிறீர்கள். கடந்த 8 ஆண்டுகளாக 12% ஜிஎஸ்டி மூலம் மக்களை அரசு சுரண்டவில்லை என நினைக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

சேலத்தில் நடந்த அரசு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையில், சேலம் மாவட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அதிக திட்டங்களை செயல்படுத்துவதாக பாமகவின் இரு தரப்பு MLAக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒற்றுமையாக பாராட்டியுள்ளனர். இதே போல் ஒற்றுமையாக மக்கள் பணியாற்ற வேண்டும் என கூறினார். அன்புமணி ஆதரவு MLA சதாசிவம், ராமதாஸ் ஆதரவு MLA அருள் ஆகியோரின் பாராட்டு குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி இவ்வாறு தெரிவித்தார்.

சிலைக்கடத்தல் வழக்கில் வெளியுறவுத்துறை, கலாச்சாரத் துறையை சேர்த்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டுக்கு சிலைகள் கடத்தப்பட்டிருப்பதால் ஒன்றிய அரசையும் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிலைக்கடத்தல் வழக்கில் ஆவணங்கள் காணாமல் போனது எப்படி என்று தமிழ்நாடு அரசுக்கும் கேள்வி எழுப்பப்பட்டது. 38 காவல் நிலையங்களிலும் ஒரே நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டு கோப்புகள் அழிந்துவிட்டனவா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் காணாமல் போனது பற்றி தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர். 1 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . இன்று நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், 2026 தேர்தல், கட்சியில் நிலவும் கருத்து வேறுபாடுகள், புதிய நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இவ்வளவு முக்கியமான கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை.

கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக, சென்ற மாதம் தொடக்கத்தில் சவரன் தங்கம் ரூ.73,000 ஆக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து கடந்த ஆக.6-ம் தேதி ரூ.75,000-ஐ தாண்டியது. அதன்பிறகு 7-ம் தேதி ரூ.75,200 ஆகவும், அடுத்த நாள் ரூ.75,760 ஆகவும் புதிய உச்சத்தை தொட்டது. இந்த தொடர் விலை உயர்வால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்தனர். இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.82,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,280-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.144க்கும், ஒரு கிலோ ரூ.1,44,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்ச் செங்கோட்டையன் வலியுறுத்தி வருகிறார். அண்மையில் டெல்லிச் சென்ற அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரைச் சந்தித்து பேசினார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியும் நாளை டெல்லிச் செல்லவுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிப்பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க டெல்லிச் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, 17 மற்றும் 18ம் தேதிகளில் தர்மபுரி மாவட்டத்தில் இபிஎஸ் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம், 28 மற்றும் 29-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், ஊழியர்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களின்போது டிஜிபியின் வழிகாட்டு உத்தரவை பின்பற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் இபிஎஸ் பிரச்சாரத்தின்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பணியாளர்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 108 அம்புலன்ஸ் ஓட்டுநர் இருளாண்டி தாக்கல் செய்த வழக்கை ஐகோர்ட் கிளை முடித்து வைத்தது.

தமிழ்நாட்டில் இன்று தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







