- Home
- /
- ஷாட்ஸ்

டெல்லியில் தீபாவளியை ஒட்டி அக்.21-ம் தேதி வரை பசுமை பட்டாசுகளை வெடிக்கவும், விற்கவும் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசு உற்பத்தியை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தொடர்ந்து கண்காணிக்கவும்,பசுமை பட்டாசுகளுக்கான க்யூஆர் கோடுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, சென்னை மாநகராட்சியில் பள்ளிகளுக்கு ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்கு 5 நிமிஷம் குடிநீர் இடைவேளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் நீர் இழப்பால் சோர்வடைவதை தடுப்பதற்காக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக 1,000 மாணவர்களுக்கு மேல் பயிலும், சுமார் 16 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 500 மாணவர்களுக்கு மேல் பயிலும் 35 பள்ளிகள் கண்டறியப்பட்டு இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதே போல, படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் இடைவேளை திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்றார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மறைந்த ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனுக்கு அக்.28 வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. நாகேந்திரன் இறந்ததை அடுத்து அவருடைய மகன் அஸ்வத்தாமன் மற்றும் அஜித் ராஜாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. இடைக்கால ஜாமின் முடிந்ததையடுத்து, நேற்று மாலை அஸ்வத்தாமன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தந்தை காரியம் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்; 15 நாட்கள் இடைக்கால ஜாமீன் தர வேண்டும் என அஸ்வத்தாமன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஒன்றரை வருடமாக ஜாமின் கிடைக்காமல் சிறையில் இருக்கும் சதீஷ் மற்றும் ஹரிஹரனுக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

திருமயம் அருகே 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞர் சண்முகவேலுக்கு 22 ஆண்டுகள் சிறை, ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விதிகள்படி அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அறங்காவலர் குழு தலைவரை நியமித்து ஓராண்டாகியும் உறுப்பினர்களை நியமிக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், 4 மாதத்துக்குள் அறங்காவலர் குழு அமைக்காவிட்டால் நீதிமன்றமே உறுப்பினர்களை நியமிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படாதது சட்ட விதிகளை அவமதிக்கும் செயல் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. DGP அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் இந்த மிரட்டல் வந்ததை அடுத்து, சீமான் வீட்டில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அண்மையில், CM ஸ்டாலின், EPS, விஜய் உள்ளிட்டோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெருக்களில் ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்தோம். சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். இன்னும் சில ஜாதிப் பெயர்களில் கூறுவதாக; வி.சி.க.தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும். வடசென்னை பகுதி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துவருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கருர், திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை செயல்படுத்தும் விதமாக நடப்பு கல்வியாண்டு முதல் (2025 - 26) 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2017-18 கல்வி ஆண்டிற்கு முன்னர் இருந்த நடைமுறையே பின்பற்றப்படும். ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் அல்லாமல் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும்.










