ஷாட்ஸ்

சிபிஐ கோரிய மனுத் தாக்கலில் மிகப்பெரிய மோசடியை உச்ச நீதிமன்ற கருத்தில் கொள்ள வேண்டும்: தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு!!

 சிபிஐ கோரிய மனுத் தாக்கலில் மிகப்பெரிய மோசடியை உச்ச நீதிமன்ற கருத்தில் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் முறையிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மோசடியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது, உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடுவோம்: கரூர் வழக்கில் உச்சநீதிமன்றம் உறுதியளித்துள்ளது.

கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, அஞ்சாரியா அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழுவில் தமிழ்நாட்டை சாராத 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவர் எனவும் உத்தரவு அளித்துள்ளது.

3வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்!!

இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி 3வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 800-க்கும் மேற்பட்ட விசைப்பகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீபாவளி ஸ்பெஷல் : திருநெல்வேலி, செங்கல்பட்டு இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தீபாவளி பண்டிகையின்போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் பின்வரும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்: ரெயில் எண்: 06156 திருநெல்வேலி – செங்கல்பட்டு சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் அக்டோபர் 21 மற்றும் 22 (செவ்வாய் மற்றும் புதன்) ஆகிய தேதிகளில் அதிகாலை 04.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 01.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும் (2 சேவைகள்). மறுமார்க்கத்தில் ரெயில் எண்: 06155 செங்கல்பட்டு – திருநெல்வேலி சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் அக்டோபர் 21 மற்றும் 22 (செவ்வாய் மற்றும் புதன்) ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.00 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும் (2 சேவைகள்).” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வார இறுதிநாள்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

வார இறுதி நாட்களை ஒட்டி கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து 310 சிறப்பு பேருந்துகள், கோயம்பேட்டில் இருந்து 55 சிறப்பு பேருந்துகள் இயக்கம். பெங்களூரு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்பட உள்ளது.

ஈரானுக்கு உதவியதாக கூறி இந்தியர்களின் 2 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை!!

ஈரானுக்கு உதவியதாக கூறி இந்தியர்களின் 2 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஈரானின் எரிவாயு பீப்பாய்களை சீனாவுக்கு கொண்டு சென்றதால் 2 கப்பல்களுக்கும் அமெரிக்கா தடை விதித்தது.

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.91,400க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.91,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,425-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.187க்கு விற்கப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி!!

தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை கொண்டாடும் விதமாக தடையை தளர்த்தலாம் என மத்திய அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் டெல்லி மக்களும், பட்டாசு விற்பனையாளர்களும் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

டிரேக் நீர்வழியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

தென் அமெரிக்கா மற்றும் அன்டார்டிகாவுக்கு இடைப்பட்ட டிரேக் நீர்வழியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகியுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் வேலை நிறுத்தம்!!

இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று முதல் அப்பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதியோர்களின் கைரேகை பதிவு மற்றும் கருவிழி ரேகை சரிபார்ப்பு தோல்வி அடைந்தாலும், அவர்களிடம் கையெழுத்து பெற்றுவிட்டு வேட்டி, சேலைகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது. இது அடுத்த வாரம் முதல் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கூட்டுறவு பணியாளர்களுக்கு குட் நியூஸ்! நீண்டநாள் கோரிக்கைக்கு செவி கொடுத்த தமிழக அரசு!!

அரசு ஊழியர்களை தொடர்ந்து கூட்டுறவு பணியாளர்களுக்கும் ஈட்டிய விடுப்பு சரண் (EL) சலுகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களை தொடர்ந்து கூட்டுறவு பணியாளர்களுக்கும் ஈட்டிய விடுப்பு சரண் (EL) சலுகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறுவது நிறுத்திவைக்கப்பட்டது. இதனை, இந்த அக்டோபர் முதல் ஒப்படைத்து பணப் பயன்கள் பெறலாம் என அரசு ஏற்கெனவே தெரிவித்தது. இப்போது, கூட்டுறவு பணியாளர்களும் இதேபோல் பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மதுரையில் விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு: சிபிசிஐடிக்கு மாற்றம்!!

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அண்ணாநகரில் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது கால்வாயில் விழுந்து தினேஷ் உயிரிழந்தன. வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி உடற்கூறாய்வு செய்து இளைஞர் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. வழக்கு விசாரணை முதற்கட்டத்தில் உள்ளதால் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என போலீசார் பதில் அளித்தார்.

கோயில் சொத்துகளை தனிநபர் பெயருக்கு பட்டா மாற்ற இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை

கோயில் சொத்துகளை தனிநபர் பெயருக்கு பட்டா மாற்ற கொண்டுவரப்பட்ட சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தனிநபர் பெயருக்கு பட்டா மாற்றும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டதிருத்தத்தை ரத்து செய்ய கோரி திருத்தொண்டர் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் ஐகோர்ட் மதுரை கிளை மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணையில், சட்டதிருத்தம் செய்து உயர்மட்ட குழு அமைத்த அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மனு குறித்து தலைமைச் செயலர், வருவாய்த்துறை செயலர், பத்திரப்பதிவுத் துறை செயலர் பதில் தரவும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

தீபாவளியின் போது டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி!!

தீபாவளியின் போது டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆதரவளித்த ஒன்றிய அரசு, டெல்லி மாநில அரசுக்கு சிவகாசி பட்டாசு, கேப் வெடி தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சேலத்தில் ரூ.15,000 லட்சம் வாங்கிய தலைமை காவலர் ராஜலட்சுமி உட்பட 4 காவலர்கள் கைது!!

சேலத்தில் ரூ.15,000 லட்சம் வாங்கிய தலைமை காவலர் ராஜலட்சுமி உட்பட 4 காவலர்கள் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பாலு என்பவரிடம் ரூ. 15,000 லட்சம் வாங்கியபோது 4 பேரும் சிக்கினர். லட்சம் வாங்கிய ஆய்வாளர் ராமராஜன், எஸ்.ஐ. ராமகிருஷ்ணன், சரவணகுமார், தலைமை காவலர் ராஜலட்சுமி கைது செய்யப்பட்டார்.

திருச்செந்தூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை!!

திருச்செந்தூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாமரைமொழியைச் சேர்ந்த கந்தையாவை சில மாதங்களுக்கு முன் உறவினர் சிவசூரியன் வெட்டிக் கொன்றார். நிபந்தனை ஜாமினில் வந்த சிவசூரியன், தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வந்துள்ளார். சிவசூரியன், அவருடைய சகோதரர் சின்னத்துரை இருசக்கர வாகனத்தில் வந்தபோது, காரில் வந்த கும்பல் பைக்கை இடித்து தள்ளி இருவரையும் அரிவாளால் வெட்டியதில் சிவசூரியன் உயிரிழந்தார்.

முன்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்வு!!

வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே உயர்வுடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண் 0.4% வரை அதிகரித்து நிறைவடைந்தது. முன்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்ந்து 82,501 புள்ளிகளானது. எஸ்.பி.ஐ. பங்கு 2%, மாருதி சுசூகி 1.7%, ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமென்ட் உள்ளிட்ட பங்கு விலை உயர்ந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 104 புள்ளிகள் அதிகரித்து 25,285 புள்ளிகளில் வரதஹகம் நிறைவடைந்தது.

நீர்நிலையில் அரசு அலுவலகம் கட்ட அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை வெளியிடுக: ஐகோர்ட்!

நீர்நிலையில் அரசு அலுவலகம் கட்ட அனுமதித்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து நிதி இழப்பு வசூலிக்கப்படும் என சுற்றறிக்கை வெளியிடவும் ஆணையிடப்பட்டுள்ளது. நீர்நிலை என பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதாக கூறி மயிலாடுதுறையைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். நீர்நிலைகளில் கட்டப்பட்ட அலுவலகங்களை இடம் மற்றுவது குறித்து 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பெங்களூரு பயணம்!!

கோவையில் நடைபெற்ற உலகப் புத்தொழில் மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றை மாலை சென்னை திரும்பினார். முதல்வரின் மைத்துனர் செல்வம், கடந்த ஆண்டு இறந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பெங்களூருவில் உள்ள செல்வம் வீட்டில் நடக்கும் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குடும்பத்துடன் தனி விமானத்தில் பெங்களூரு செல்கிறார்.