பஜாஜ் நிறுவனம் உருவாக்கும் 125 சிசி கொண்ட புதிய பைக் !!!

Update: 2024-05-24 08:36 GMT

பஜாஜ் நிறுவனம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் 125சிசி பிரிவில் கடுமையான போட்டி உருவாக்கி வருகிறது. tvs மற்றும் ஹீரோ நிறுவனங்கள் முறையே ரைடர் மற்றும் 125R போன்ற மாடல்களை 125சிசி பிரிவில் விற்பனை செய்து வருகின்றன.

இந்த வரிசையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பஜாஜ் உருவாக்கும் புதிய பைக்கின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

புதிய பைக்கில் சற்றே மெல்லிய டயர்கள், பின்புறம் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதைக் கொண்டு இந்த பைக் வழக்கமாக 150 - 160 சிசி பிரிவில் இடம் பெறாது என்பதை உணர்த்துகிறது.

இந்த பைக் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதில் எல்இடி ஹெட் லைட் வித்தியாசமான வடிவம் தடிமனான டேங்க் எக்ஸ் டென்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்புறம் சற்று உயர்த்தப்பட்டுள்ளது. இருக்கைகள் ஸ்ப்லிட்-சீட் வடிவில் உள்ளது. இவற்றைக் கொண்டு பார்க்கும் போது இந்த பைக் 125 சிசி பிரிவு இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அந்த வரிசையில் இந்த பைக் 125 சிசி பிரிவில் டிவிஎஸ் ரைடர் மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம் எனினும் புதிய பைக் வருது பஜாஜ் சார்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

Tags:    

Similar News