அதிரடி கியா கரென்ஸ் EV மாடல் டெஸ்டிங் - மாற்றங்களுடன் வெளியீடு !
கியா நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் கரென்ஸ் எம்பிவி மாடலை அடுத்த ஆண்டு அப்டேட் செய்ய இருக்கிறது.
காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய கரென்ஸ் மாடலுடன், கியா இந்தியா நிறுவனம் கரென்ஸ் EV மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே கியா கரென்ஸ் EV மாடல் டெஸ்டிங் செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதில் கரென்ஸ் EV மாடல் அதன் ஐசி எஞ்சின் வெர்ஷனை விட வித்தியாசமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
கரென்ஸ் EV மாடலின் பிளாட்பார்ம், பாடி மற்றும் பெரும்பாலான இன்டீரியர் அதன் ஸ்டான்டர்டு மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும். எனினும், ஸ்டைலிங் அடிப்படையில் காரின் முன்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த மாடல் வெளியீட்டுக்கு முன் கியா நிறுவனம் தனது EV9 பிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி கியா நிறுவனம் தனது EV9 ஃபிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்கிறது.
புதிய கரென்ஸ் EV மாடலின் பவர்டிரெயின் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கிரெட்டா EV மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது.