பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிரடியாக பல தள்ளுபடி சலுகைகளை அறிவித்த ஏதர் எனர்ஜி நிறுவனம் !!

Update: 2024-10-18 08:50 GMT

 Aether Energy Company

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இந்தியாவின் எலக்ட்ரிக் பைக் உற்பத்தியாளரான ஏதர் எனர்ஜி நிறுவனம் தங்களது 450 சீரிஸ் மாடல் ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு பண்டிகை காலத்தை முன்னிட்டு தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. 450X மற்றும் 450 Apex என்ற இரண்டு மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் தற்போது வாங்கினால் ரூ.25,000 வரை வரை சேமிக்கலாம் என தெரிவித்துள்ளது.

ஏதர் நிறுவனம் இந்த பண்டிகை கால சலுகை மட்டுமில்லாமல் எட்டு வருடங்கள் வரை பேட்டரி வாரண்டியும் தருகிறது. இதன் மூலம் நம்பகத்தன்மை மற்றும் எந்தவொரு கூடுதல் செலவும் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பாட்டரி பெர்ஃபார்மன்ஸை தருவதிலும் உறுதியாக இருப்போம் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்தியா முழுவதுமுள்ள தங்களது பரந்த ஏதர் க்ரிட் நெட்வொர்க் மூலம் ஒரு வருட காலத்திற்கு நீங்கள் இலவசமாக சார்ஜ் செய்துகொள்ளலாம் என்ற அறிவிப்பையும் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏதர் நிறுவனத்திற்கு 2,152 சார்ஜிங் நிலையங்கள் உள்ளது. இது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதுதவிர இந்த பண்டிகை காலத்தில் ஏதரின் இரண்டு மாடல்களில் ஏதாவது ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை இன்னும் ஈர்க்கும் விதமாக சில குறிப்பிட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தி மாத தவணை மூலம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவோர்களுக்கு ரூ.10,000 வரையில் கேஷ்பேக் கிடைக்கிறது. இப்படி பல சலுகைகளை அறிவித்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் ஏதர் எனர்ஜி நிறுவனம் உள்ளது.

Tags:    

Similar News