உலக பயண விருதுகளில் சாதனை படைத்த ஏர் இந்தியா !!

Update: 2024-10-16 09:20 GMT

ஏர் இந்தியா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சமீபத்தில் மணிலாவில் நடைபெற்ற 31ஆவது ஆண்டு உலக பயண விருதுகளில் (WTA - World Travel Awards)டாடா குழுமத்தின் மற்றும் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர் இந்தியா, ஆசியாவின் முன்னணி ஏர்லைன் இன்ஃப்லைட் என்டர்டெயின்மென்ட் (2024) விருதை வென்று வரலாறு படைத்துள்ளது.

இந்த விருதை வென்றதன் மூலம், ஏர் இந்தியா நிறுவனமானது விமான பயண பொழுதுபோக்குக்காக அங்கீகரிக்கப்பட்ட பிரத்யேக விமான குழுவில் சேர்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனம் இந்த விருதை பெறுவது இதுவே முதல்முறை என்பதால் இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

ட்ராவல் இன்டஸ்ட்ரியின் ஆஸ்கர் விருதுகளாக கருதப்படும் உலக பயண விருது நிகழ்வில் வழங்கப்படும் விருதுகள் உலகளாவிய பயணம் மற்றும் சுற்றுலாவின் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் நிறுவனங்களை பெருமைப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News