டிவிஎஸ் மோட்டார் கம்பெனி அறிமுகம் செய்த அபாச்சி ஆர்டிஆர் 160 சீரிஸ் பிளாக் எடிசன் !!
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் ஆர்டிஆர் 160 மற்றும் ஆர்டிஆர் 160 4வி மாடல்களின் பிலேஸ் ஆப் பிளாக் டார்க் எடிசன் வேரியன்ட்களை அறிமுகம் செய்தது புதிய ஆர்டிஆர் 160 பிளாக் எடிஷன் மாடலின் விலை ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மற்றும் ஆர்டிஆர் 160 4வி பிளாக் எடிசன் மாடலின் விலை ரூபாய் ஒரு லட்சத்து 25
ஆயிரம் என எக்ஸ் நிறுவனம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் சைனி ப்ளாக் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பைக் டேங்க் பகுதியில் டிவிஎஸ் அபாச்சி ஸ்டைலியன் லோகோ பொருத்தப்பட்டு இருக்கிறது.
இதன் இதன் எக்சாஸ்ட் பிளாக்டு அவுட் செய்யப்பட்டு உள்ளது. புதிய நிறம் தவிர இந்த பைக்குகளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 160சிசி-யில் கிடைக்கும் இரு மாடல்களிலும் மூன்று ரைடிங் மோட்கள், டி.வி.எஸ். SmartXonnect சிஸ்டம், வாய்ஸ் அசிஸ்ட் மற்றும் எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கப்பட்டு இருக்கிறது.
அபாச்சி RTR 160 2V மாடலில் 159.7சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சம் 15.82 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. அபாச்சி RTR 160 4V மாடலில் 160சிசி, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.இந்த எஞ்சின் 17.35 ஹெச்.பி. பவர், 14.73 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.