இந்தியாவில் நல்ல மைலேஜ் மற்றும் குறைந்த பட்ஜெட் கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளக்கான சிறந்த கார் SUV !!
மக்கள் அன்றாட வாழ்க்கையில் சார் வாங்குவது இயல்பாக உள்ள நிலையில் மக்கள் நல்ல மைலேஜ் மற்றும் குறைவான விலையில் கார் வாங்க நினைகின்றனர்.இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை ஈர்க்க, பல புதிய மாடல் கார்களை போட்டி போட்டுக் கொண்டு தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன.
வாடிக்கையாளர்களின் விருப்பங்களை கருத்தில் கொண்டு கார் நிறுவனங்களும் ஏராளமான பாதுகாப்பு அம்சஙக்ளையும் வசதிகளையும் வழங்கி வருகின்றன. அந்த வகையில் டாடா பஞ்ச் (Tata Punch) உங்களுக்கான சிறந்த காராக இருக்கும். ரூ.6.13 லட்சத்தில் கிடைக்கும் இந்த இந்த கார், உண்மையிலேயே பணத்திற்கான மதிப்பை வழங்கும் காராக காம்பாக்ட் SUV வகை (TATA SUV Car) உள்ளது.
டாடா பன்ச் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது. இந்த கார் ஒரு லிட்டருக்கு 18.82 கிலோமீட்டர் மைலேஜ் தரும். பஞ்சில் CNG ஆப்ஷனும் உள்ளது, இதிலும் என்ஜின் ஒன்றுதான் ஆனால் பவர் மற்றும் டார்க்கில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. CNG மாடலில் 72.49 bhp மற்றும் 103 Nm டார்க் கொடுக்கிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு CNG சிலிண்டர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது 210-லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது. இந்த மாடல் 27 கிமீ/கிலோ மைலேஜ் தரும்.