பி.எம்.டபிள்யூ. நிறுவனம் திட்டமிட்ட இப்படி ஒரு மாடலா !
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது எதிர்கால மோட்டார்சைக்கிள் மாடல்களில் கிம்பலில் மவுன்ட் செய்யக்கூடிய எல்.இ.டி. ஹெட்லைட் வழங்க இருக்கிறது.
இது தொடர்பான விவரங்கள் பி.எம்.டபிள்யூ. காப்புரிமையில் தெரியவந்துள்ளது.
காப்புரிமை விவரங்களின் படி எல்.இ.டி. ஹெட்லைட் 3-ஆக்சிஸ் கிம்பலில் மவுன்ட் செய்யப்பட்டு இருக்கிறது. ஒளிப்பதிவு துறையில் கேமரா ஆடினாலும், காட்சிகள் ஆடாமல் பார்த்துக் கொள்ளவே கிம்பல் பயன்படுத்தப்படுகிறது.
இதே பாணியை பி.எம்.டபிள்யூ. தனது மோட்டார்சைக்கிள் மாடல்களில் கொண்டுவர திட்டமிடுகிறது.
மோட்டார்சைக்கிள் எந்த பக்கம் திரும்பினாலும் அல்லது கடுமையாக பிரேகிங் செய்யும் போதும் பி.எம்.டபிள்யூ. சிஸ்டத்தில் எல்.இ.டி. ஹெட்லைட் எந்த பக்கமும் அசையாது. இதுதவிர ஹெட்லைட் கார்னெரில் மட்டும் ஒளியை பாய்ச்சும். இதனால் ரைடிங்கின் போது அதிக பாதுகாப்பு கிடைக்கும் என பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏ.பி.எஸ். உள்ளிட்டவைகளையும் கட்டுப்படுத்துகிறது. புதிய கிம்பல் ஹெட்லைட் சிஸ்டம் பி.எம்.டபிள்யூ. உற்பத்தி செய்யும் எதிர்கால GS சீரிஸ் மாடல்களில் வழங்கப்படுகிறது.