இந்தியாவில் கார் ஸ்டீயரிங் வலது பக்கம் : வெளிநாடுகளில் கார் ஸ்டீயரிங் இடது புறம் - என் யோசித்திருக்கிறீர்களா?

Update: 2024-11-09 12:20 GMT

 கார் ஸ்டீயரிங் 

இந்தியாவில் கார் ஸ்டீயரிங் வலது பக்கம் :

இந்தியாவை 1947க்கு முன் ஆங்கிலேயர்கள் நீண்ட காலம் ஆண்டனர் என்பது அனைவரும் தெரியும். இந்தியாவில் போக்குவரத்தை எளிதாக்க சாலையின் இடதுபுறத்தில் வாகனம் ஓட்ட வேண்டும் என்ற போக்குவரத்து விதியை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.

ஆங்கிலேயர்கள் வகுத்த இடதுபுறம் நடக்க வேண்டும் என்ற விதியால், வண்டி ஓட்டுபவர்கள் வண்டியின் வலது பக்கத்தில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது. கார்களிலும் இதே நடைமுறையே பின்பற்றப்பட்டது.

காலப்போக்கில், வண்டிகள் கார்களாக மாற்றப்பட்டதால், ஓட்டுநருக்கு தெளிவான பார்வையை உறுதி செய்வதற்காக, ஓட்டுநர் இருக்கையின் நிலை வலதுபுறத்தில் இருந்தது.

காலப்போக்கில், வண்டிகள் கார்களாக மாற்றப்பட்டன. பின்னர், கார்களில், ஓட்டுநருக்கு தெளிவாக பார்ப்பதில் சிரமம் ஏற்படாமல் இருக்க, ஓட்டுனர் இருக்கையை வலது பக்கம் வைத்து, ஸ்டியரிங்கும் வலது பக்கம் கொடுக்கப்பட்டது.

இதன் காரணமாக, காரை ஓட்டும்போது, ​​எதிரே வரும் வாகனங்களை டிரைவர் தெளிவாகவும் எளிதாகவும் பார்க்க முடியும்.எனவே தான், இந்தியாவில் உள்ள கார்களில் ஓட்டுநர் இருக்கை மற்றும் ஸ்டீயரிங் வலது பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் கார் ஸ்டீயரிங் இடது புறம் :

இந்தியா, ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் கார்களில் ஸ்டீயரிங் வலதுபுறம் வருகின்றன. ஆனால் பெரும்பாலான நாடுகளில் ஸ்டீயரிங் இடது பக்கம்தான் இருக்கும்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி 200 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்ததால், கார்களின் பொறியியல் கூட பிரிட்டிஷ் பொறியியலால் ஈர்க்கப்பட்டது. எனவே, அவர்களின் கார்களுக்கு வலது பக்கத்தில் ஸ்டீயரிங் இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகும் இதே தொழில்நுட்பம் தொடர்கிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் லெஃப்ட் ஹேண்ட் ஸ்டீயரிங் கொடுப்பதற்கு ஒரு காரணம், அமெரிக்கா உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளில் சாலையின் வலது பக்கம் கார்களை ஓட்டுவது, டிரைவர் காரின் இடது பக்கம் அமர்ந்து செல்வதுதான்.

இது வாகனம் ஓட்டுவதை எளிதாக்குகிறது. எதிரே வரும் வாகனத்தின் வேகம் மற்றும் தூரத்தைக் கண்டறியவும் இது உதவுகிறது.

Tags:    

Similar News