Citroen நிறுவனம் அறிமுகப்படுத்திய Aircross Xplore எடிஷன் - த்ரில்லான டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸ் !!
பிரெஞ்சு நாட்டை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான Citroen, அதன் Aircross SUV ரேஞ்சில் புதிய லிமிட்டட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனம் Aircross Xplorer என்ற லிமிட்டட் எடிஷனை ரூ.8.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
பிராண்டின் இந்த லேட்டஸ்ட் லிமிட்டட் எடிஷன் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஷோரூமுக்கு ஏற்கனவே வந்துவிட்டது. இப்போது முழுமையாக திரும்ப பெறக்கூடிய டோக்கன் தொகையை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் Aircross Xplore எடிஷன் புதிய டார்கெட் ஆடியன்ஸை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு த்ரில்லான டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது.
சமீபத்திய லிமிட்டட் எடிஷனை வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் Aircross Xplore- ஐ ரூ.24,000 மதிப்புள்ள ஸ்டாண்டர்ட் பேக் மற்றும் ரூ.51,700. மதிப்புள்ள ஆப்ஷனல் பேக் என மொத்தம் இரண்டு பேக்கேஜ் ஆப்ஷன்களுடன் பெற முடியும்.
ரூ.24,000 மதிப்புள்ள ஸ்டாண்டர்ட் பேக்கில் கிடைக்கும் அக்சஸரீஸ் - ஃப்ரன்ட் டேஷ்கேம், ஹூட் கார்னிஷ், இலுமினேட்டட் சில் பிளேட், 3டி டோர் கிளேடிங், எக்ஸ்ப்ளோரர் கிராஃபிக்ஸ், Ambient ஃபுட்வெல் லைட்டிங்.
ரூ.51,700 மதிப்புள்ள ஆப்ஷனல் பேக்கில் கிடைக்கும் அக்சஸரீஸ் - மேற்கண்ட அக்சஸரீஸ்களை தவிர கூடுதலாக ரியர் சீட் என்டர்டெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் டூயல் போர்ட் அடாப்டர் ஆகியவை அடக்கம்.
Aircross Plus வேரியன்ட் 1.2L நார்மல் பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கும் போது, Max வேரியன்ட் மிகவும் சக்திவாய்ந்த 1.2L டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனையும் பெறுகிறது.
வெளியில் இருந்து பார்த்தால் இந்த மாடல் ரக்கடான ரோட் பிரசென்ஸை வழங்குகிறது புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் இந்த வெர்ஷன் அதே 1.2-லிட்டர் டர்போ மற்றும் 1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த எஞ்சின் யூனிட் 5-ஸ்பீட் மேனுவல், 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.