மஹிந்திரா நிறுவனம் அறிவித்த தள்ளுபடி !!

Update: 2024-06-05 06:50 GMT

மஹிந்திரா நிறுவனம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மஹிந்திரா நிறுவனம் ஸ்டாகில் உள்ள தனது கார்களை விற்பனை செய்ய தற்போது ரூபாய் 4.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

இதனால் கார் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறைந்த விலையில் கார்களை வாங்கிக் கொள்ள முடியும்.

மக்கள் மத்தியில் பிரபலமான எக்ஸ்யூவி 400 இவி, எக்ஸ்யூவி 700, ஸ்கார்பியோ என் உள்ளிட்ட கார்களுக்கு இந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

2024ம் ஆண்டு துவங்கி ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் 2023ம் ஆண்டில் மஹிந்திரா நிறுவனம் தயாரித்த சில கார்களை விற்காமல் வைத்துள்ளது.

Advertisement

இந்த கார்கள் எல்லாம் விற்று ஸ்டாக்குகளை தீர்க்க அந்நிறுவனம் பல்வேறு விதமான தள்ளுபடிகளையும் பலன்களையும் வழங்கி உள்ளது.

அதன்படி மஹிந்திரா எக்ஸ்யூவி 400 இவி, எக்ஸ்யூவி 700 மற்றும் ஸ்கார்பியோ என் ஆகிய கார்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

இந்த ஸ்டாக்குகளை விற்பதற்காக மஹிந்திரா நிறுவனம் ரூ1லட்சம் வரை ஸ்கார்பியோ கார்களுக்கு தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. ரூ1.5லட்சம் வரை எக்ஸ்யூவி700 கார்களுக்கு தள்ளுபடிகளை வழங்கி வருகிறது.

அதுவும் ஸ்டாக் காலியாகிவிட்டால் இவ்வளவு தள்ளுபடிகள் கிடைக்குமா என்ற உறுதியும் கிடையாது.

Tags:    

Similar News