கார்களில் எஞ்சின்கள் முன்பக்கத்தில் இருப்பதற்கான காரணம் தெரியுமா ??
முன் பக்கத்தில் எஞ்சின் உள்ள கார்களை ஓட்டுவது எளிதாக இருக்கும், காரின் இன்ஜின் அதன் முன்பக்க ஆக்ஸிலில் பொருத்தப்படுவதால் இருக்கும் முக்கியமான பலன் இந்த கார் அண்டர்ஸ்டியர் ஆகாது, அதாவது கார் வேகமாக செல்லும்போது காரின் ஸ்டியரிங்கை திருப்பினால் வீல் உடனடியாக திரும்பும், அதிக எடை இருப்பதால் இது சாத்தியமாகிறது. குறிப்பாக ஓட்டுநர் காரைக் கட்டுப்படுத்துவதையும், இயக்குவதையும் எளிதாக்குகிறது. முன்பக்கம் இன்ஜினை வைத்து விட்டால் பின்பக்கம் பொருட்களை ஏற்றிச் செல்ல அதிக இடம் கிடைக்கும். இதுவும் காரின் இஞ்சினை முன்பக்கம் வைக்க முக்கியமான காரணம்.
முன் பக்கத்தில் என்ஜின் இருப்பதால், கார் இயங்கும்போது, காற்று நேரடியாக எஞ்சின் மீது வீசப்பட்டு அதிக அளவில் குளிர்ச்சியடைகிறது. இதனுடன், காரில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு எஞ்சின் பாதுகாப்பையும் வழங்குகிறது. அதே நேரம் எஞ்சின் முன் பக்கத்தில் இருந்தால் தான் அதை பழுதுபார்க்கவும், பராமரிக்கவும் எளிதாக இருக்கும்.கார்களில் முன் பக்கத்தில் என்ஜின் பொருத்தப்படுவதால், அது தயாரிப்பதற்கு எளிமையானது மற்றும் குறைந்த செலவுடையது ஆகும்.
காரின் முன்புறத்தில் எஞ்சினை வைப்பதற்கு, இரண்டு பொதுவான காரணங்கள் உள்ளன. அவை காரில் இடம் அதிகரிப்பது மற்றும் எஞ்சினை சர்வீஸ் செய்வதை எளிதாக்குவது. முன்பக்கத்தில் எஞ்சின் இருப்பதால், அணுகுவதை எளிதாக்குகிறது. அதுமட்டுமில்லாமல் எந்தவகையான மாற்றங்களையும் அல்லது பாகங்களை மாற்றுவதையும் எளிதாக்குகிறது.இந்த கார் நேரடியாக ஏதாவது பொருட்கள் அல்லது மற்ற வாகனங்கள் மீது மோதினால் அதன் பெரும்பாலான பாதிப்பை காரின் இன்ஜின் வாங்கிக் கொள்ளும். இதனால் காருக்குள் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பு இருக்கும்.