மழை நீரில் உங்களது காரை பாதுக்காக வேண்டுமா !! இந்த ஏழு அம்சங்கள் உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டும் அந்த ஏழு அம்சங்கள் என்னென்ன ...

Update: 2024-06-07 08:40 GMT

கார் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நீர் தடுப்பு படலம் :

மழைக்காலத்தில் உங்களது காரில் மழை நீர் வின்ட்ஷீல்டில் படுவதினால் உங்களால் சாலையை தெளிவாக காண முடியாது வைபர் உள்ளதே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் வைபர்கள் மழை நீரை நீக்குவதை மட்டுமே செய்யும் ஆனால் மங்கலான பார்வையை தடுக்காது. இதற்காகவே மெழுகு படலங்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

ரப்பர் ஃப்ளோர் மேட் :

மழைக்காலத்தில் எப்படி இருந்தாலும் காருக்குள் நம் அணியும் செருப்பு மற்றும் ஷூ அல்லது நம் பயன்படுத்தும் குடை அல்லது பைகளில் இருந்து மழை நீர் காருக்குள் போக வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதனால் ரப்பர் ஃப்ளோர் மேட் காருக்குள் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. இந்த மேட் ரப்பரினால் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டியது அவசியம் எனில் அதனை சுத்தம் செய்வது எளிதாக இருக்கும்.

ORVM ஆண்டி-ஃபாக் படலம்:

மழைக்காலத்தில் காலை நேரங்களில் மழை நீர் மற்றும் பனிகள் காரின் பின்புறத்தை காட்டும் உங்களது காரின் வெளிப்பக்க கண்ணாடிகளில் வெள்ளை நிறத்தில் பணி உருவாக கூடும் இதனை தடுப்பதற்கு என மார்க்கெட்டை பிரத்தியோகமாக விற்பனை செய்யப்படும் ஆண்டி-ஃபாக் படலத்தை வாங்கி பயன்படுத்தலாம்.

மெழுகு பெயிண்ட் படலம் :

மழைக்காலம் என்றாலே சாலைகள் ஈரமாக இருப்பதனால் சாலைகளில் இருக்கும் சேறு சகதியும் நம் கார்கள் மீது படுவது தெரிந்த விஷயம். இதனை தவிர்ப்பதற்கு நம் காரின் பெயிண்டிங் மீது மெழுகு படலத்தை கொடுக்கலாம். மேலும் இது உராய்வுகள் மற்றும் கிறல்களில் இருந்து காரை பாதுகாக்கும்.

மைக்ரோ பைபர் துணி :

மழைக்காலத்தில் எப்போதும் உங்களது காருக்குள் சிறு சிறு துணிகள் இருப்பது நல்லது ஏனெனில் நீங்க எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் மழைநீர் உங்களது காருக்குள் வந்துவிடும். மழை நீர் காருக்குள் ஸ்டேரிங் ,சக்கரம் ,கியர் லிவர் மற்றும் டெஸ்போர்ட்டில் இருந்தால் அதனை துடைப்பதற்கு துணி தேவை. அவை மைக்ரோ பைபர் துணிகளாக இருந்தால் மிகவும் சிறந்தது.

வாட்டர் ப்ரூஃப் கார் கவர் :

மழைநீர் உள்ளே போகாமல் இருக்க மிகவும் சிறந்தது. தூசி, சேறு சகதிகளில் இருந்து காரை பாதுகாக்க வாட்டர் ப்ரூஃப் கவரைக் கொண்டு காரை மூடுவது நிறைய நன்மைகள் தரும். கார்களின் வெளிப்புறங்களில் ஏற்படும் துருப்பிடித்தல்களையும் கவர் தடுக்கும் காரின் மாடலுக்கு ஏற்றவாறு கவரையும் வாங்கி மூடுவது மிகவும் சிறந்தது.

அவசர கால உபகரணங்கள் :

மழைக்காலத்தில் எது எப்போது நடக்கும் என்று ஒன்றும் சொல்ல முடியாது ஆதலால் ரெயின் கோட், குடை, ஒளியை எதிரொலிக்க கூடிய வார்னிங் முக்கோணங்கள் மற்றும் ஜம்ப் ஸ்டார்டர் உள்ளிட்டவை அடங்கிய அவசர கால உபகரணங்களை எப்போதும் காரல் வைத்திருப்பது நல்லது.

Tags:    

Similar News