யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் !!

Update: 2024-06-17 07:20 GMT

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் இருந்தே இது தொடர்பான பணிகளில் யமஹா ஜப்பான் மற்றும் இந்திய பிரிவு ஈடுபட்டு வருகிறது.

அதிவேகம், சீரான செயல்திறன் மற்றும் அசத்தலான ஸ்டைலிங் என யமஹாவின் டி.என்.ஏ.வுக்கு ஏற்ற வகையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்படும் என்று யமஹா அதிகாரி ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த ஸ்கூட்டர் இந்திய சந்தையில் ரக்கட் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு யமஹா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அப் நிறுவனமான ரிவர் மொபிலிட்டியில் ரூ. 332 கோடியை முதலீடு செய்தது.

தற்போதைய திட்டத்தின் படி யமஹா நிறுவனம் 2025-27 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் மாடல்களை அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிவரை இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் சந்தைகளில் பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விற்பனையில் கவனம் செலுத்த யமஹா முடிவு செய்துள்ளது.

Tags:    

Similar News