ஹெலிகாப்டர் கண்டுபிடிப்பின் வரலாறு !
1500 ஆம் ஆண்டு இத்தாலியைச் சார்ந்த லியனார்டோ டாவின்சி என்னும் அறிஞர், முதலில் ஹெலி காப்டரை அமைத்தார். அக்காலத் தில் எஞ்சின்கள் இல்லாததால் இச்சோதனை வெற்றிபெறவில்லை.
1910-ஆம் ஆண்டு ஈகார் சிக்கார்ஸ்கி என்பவர். 'லிப்ஃட்' முறையில் தானே தூக்கிப் பறந்து செல்லும் ஹெலிகாப்டரை அமைத்தார். இவர் விமானங்களை அமைப்பதில் நிபுணராக இருந்தும், இவர் அமைத்த ஹெலிகாப்டரில் விமானியும் செல்லமுடியாதபடி இருந்தது.
விமானி அமர்ந்து இயக்கக்கூடிய ஹெலிகாப்டரை விமானத் தயாரிப்பு நிபுணரான பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூயிஸ் சார்லஸ் பிரகட் என்பவர் முதலில் அமைத்தார். இதன் தொடர்ச்சியாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ரால்ப்ஸ் 1939-ஆம் ஆண்டு ஹெலிகாப்டரில் சுமார் 12,000 அடி உயரம் வரை பறந்து சென்று காட்டினார். இது இவர் அமைத்த ஹெலிகாப்டராகும்.
1941-ஆம் ஆண்டு மீண்டும் சிக்கார்ஸி ஆராய்ச்சி செய்து ஒரு ஹெலிகாப்டரை அமைத்தார். தாம் அமைத்த ஹெலிகாப்டரை ஆகாயத்தில் ஒன்றரை மணி நேரம் அசையாது நிறுத்தி வைத்துக் காண்பித்தார். இன்று அவர் அமைத்த ஹெலிகாப்டரில் பல நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு அதிவேக ஹெலிகாப்டர்கள் உருவாக்கம் பட்டுள்ளன.