ஹோண்டா நிறுவனம் விரைவில் வெளியீடும் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் !!

Update: 2024-11-20 07:21 GMT

Honda

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெகு விரைவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அறிக்கைகளின்படி நவம்பர் 27ஆம் தேதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட திட்டமிட்டுள்ளது.

விரைவில் வெளியாகும் மாடல் குறித்து இதுவரை வெளியாகி உள்ள டீஸர்கள் அதன் டிசைன், அம்சங்கள் மற்றும் பலவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளன. அந்த வகையில் சமீபத்திய டீஸர் ஒன்று ரேஞ்ச் பற்றிய தகவல்களை வழங்குகிறது

சமீபத்திய டீஸர் ஸ்டாண்டர்ட் மற்றும் ஸ்போர்ட் ஆகிய இரண்டு ரைடிங் மோட்ஸ்களுடன், ஸ்டாண்டர்ட் மோட்-இல் 104 கிமீ என்ற புதிய இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்சை காட்டுகிறது. இது ரேஞ்ச் குறைய வழிவகுக்கும். ட்ரிம் அளவை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரையும் டீஸர் காட்டுகிறது.

லெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பெக் வெர்ஷனில் ஸ்மார்ட் ஃபோன் கனெக்டிவிட்டி வசதியுடன் கூடிய மல்டி-கலர் TFT ஸ்கிரீன் இடம்பெறும். இ-ஸ்கூட்டரின் ரேஞ்ச், ரைடிங் மோட், நேரம், பேட்டரி சதவீதம், நுகர்வு உள்ளிட்ட முக்கியமான விவரங்களைக் கண்காணிக்க இந்த யூனிட் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும். இந்த ஸ்கூட்டர் ஸ்விங்ஆர்ம்-மவுண்ட்டட் மோட்டாருடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய டீஸர்களில் ஸ்கூட்டரின் LED ஹெட்லேம்ப் மற்றும் இருக்கைகளின் கிளிம்ப்ஸ்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.ICE டூ-வீலர் மார்க்கெட்டில் ஹோண்டா ஒரு பெரிய நிறுவனமாக உள்ள நிலையில் இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் சற்று தாமதமாகவே நுழைந்துள்ளது. ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் போட்டி விலையில் இருந்தால், அது ஆக்டிவா பிராண்டின் வலுவான நற்பெயரை இன்னும் உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News