"இந்தியாவின் NO1 எலக்ட்ரிக் பைக் REVOLT" " 84 ஆயிரத்துக்கு E BIKE "
Update: 2024-12-05 08:13 GMT
- Revolt நிறுவனம் தற்போது 2 பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்கிறது. இதில், 2 ஸ்ட்ரீட் ரக பைக்குகள், Revolt நிறுவனத்தின் மிக விலை குறைவான மாடல் Revolt RV1 பைக் ரூ.84,990 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. அதிக விலை கொண்ட மாடலாக Revolt RV 400 ரூ.1,18,456 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது
- இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்து ரிவோல்ட் நிறுவனமானது புதிதாக RV1 என்ற விலை குறைவான எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே அதிகளவில் விற்பனை செய்து வரும் நிலையில், எலெக்ட்ரிக் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது ரிவோல்ட்.
- RV400 மற்றும் RV400 BRZ ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்து வந்தது ரிலோல்ட். அந்த பைக்குகளுடன் தற்போது RV1 மற்றும் அதன் அதிக ரேஞ்சு கொண்ட வேரியன்டான RV1+ ஆகிய எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
- இவற்றில் RV400 எலெக்ட்ரிக் பைக்கை அந்நிறுவனத்தின் விலையுயர்ந்த தயாரிப்பாக இருந்து வருகிறது. ரூ.1.26 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில், 150 கிமீ ரேஞ்சு மற்றும் மணிக்கு 85 கிமீ அதிகபட்ச வேகம் ஆகிய அம்சங்களைக் கொண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த எலெக்ட்ரிக் பைக்.
- RV400-ஐ விட விலை குறைவான எலெக்ட்ரிக் பைக்காக வெளியாகியிருக்கிறது RV1. பைக்கின் விலையைக் குறைப்பதற்காக குறைவான விலை கொண்ட பாகங்களைப் பயன்படுத்தியிருக்கிறது ரிவோல்ட். இது ஒரு எலெக்ட்ரிக் பைக் தான் என்றாலும், பார்ப்பதற்கு கம்யூட்டர் பைக் போலவே இருக்கிறது. எனவே, இதனை இந்தியாவில் முதல் எலெக்ட்ரிக் கம்யூட்டர் பைக் என அழைக்கிறது அந்நிறுவனம்.
- இந்த பைக்கில் 2.2kWh பேட்டரியைக் கொடுத்திருக்கிறது ரிவோல்ட். இந்த பேட்டரியின் உதவியுடன் சிங்கிள் சார்ஜில் 100 கிமீ வரை பயணம் செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது RV1. 3.75hp பவரை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரைப் பெற்றிருக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக்கில், முன்பக்கமும் பின்பக்கமும் டிஸ்க் பிரேக்குகளே கொடுக்கப்பட்டிருக்கிறது.
- இந்த பைக்கின் அனைத்து விளக்குகளும் LED-யாகவே கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், 180 மிமீ கிரௌண்டு கிளியரன்ஸ் மற்றும் 108 கிலோ எடையையும் கொண்டிருக்கிறது இந்த RV1 எலெக்ட்ரிக் பைக். இந்த பைக்கின் பேட்டரியை 80% வரை சார்ஜ் செய்ய 2.15 மணி நேரம் ஆகும் நிலையில், இந்த பைக்கானது மணிக்கு 70 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது.
- 100 கிமீ என்ற குறைவான ரேஞ்சு மற்றும் சிறிய பேட்டரி கொண்ட RV1 எலெக்ட்ரிக் பைக்கை ரூ.84,999 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது ரிவோல்ட்.
- 160 கிமீ ரேஞ்சுடன் சற்று பெரிய பேட்டரியைக் கொண்டிருக்கும் RV1+ எலெக்ட்ரிக் பைக்கை ரூ.99,999 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
- மத்திய அரசின் EMPS 2024 (இந்த செப்டம்பர் மாதம் மட்டும்) அல்லது PM-Drive (செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு) எலெக்ட்ரிக் வாகன மானியத் திட்டங்களின் கீழ், இந்த எலெக்ட்ரிக் பைக்குகளை ரூ.10,000 வரை மானியத்துடன் வாங்க முடியும். தற்போது ரூ.499 செலுத்தி இந்த பைக்குகளை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- RV1 மாடலை விட சற்று பெரிய பேட்டரியுடன், கூடுதல் ரேஞ்சையும் கொண்டிருக்கிறது இந்த RV1+ எலெக்ட்ரிக் பைக். இந்த ஒரு மாற்றத்தைத் தவிர, RV1 மாடலுக்கும், RV1+ மாடலுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை.
- RV1+ மாடலில் 3.24kWh பேட்டரியைக் கொடுத்திருக்கிறது ரிவோல்ட். இந்த பேட்டரியின் உதவியுடன் சிங்கிள் சார்ஜில் 160 கிமீ வரை பயணம் செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது RV1+ எலெக்ட்ரிக் பைக். இந்த பைக்கின் பேட்டரியை 80% வரை சார்ஜ் செய்ய 3.30 மணி நேரம் ஆகும் நிலையில், இந்த பைக்கும் மணிக்கு 70 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
விலை நிலவரம்
REVOLT RV 1
Standard 84,990.00 எக்ஸ்ஷோரூம் விலை
Standard - Titan Red Silver 87,990.00 எக்ஸ்ஷோரூம் விலை
Plus 99,990.00 எக்ஸ்ஷோரூம் விலை
Plus - Titan Red Silver 102,990.00 எக்ஸ்ஷோரூம் விலை
REVOLT RV 400
BRZ 118,450.00 எக்ஸ்ஷோரூம் விலை
பிரிமீயம் 136,950.00 எக்ஸ்ஷோரூம் விலை