சுஸுகி அக்சஸ் -125 ஸ்கூட்டர் அறிமுகம்!

Update: 2024-08-01 13:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது சுசுகி அக்சஸ் 125 மற்றும் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஆகியவற்றை வரும் பண்டிகை நாட்களை முன்னிட்டு புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் ஆனது ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜூபிடர் 125 மற்றும் ஹீரோ டெஸ்டினி 125 போன்ற ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருக்கும்.

ஆக்சஸ் 125 ஆனது மெட்டாலிக் சோனோம ரெட் மற்றும் பியர் மிராஜ் ஒயிட் ஆகிய புதிய டூயல்-டோன் வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும், பர்க்மேன் ஸ்ட்ரீட் ஆனது புதிய மெட்டாலிக் மேட் பிளாக் நம்பர் 2 வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

பண்டிகை நாட்களை முன்னிட்டு இந்த புதிய வண்ண தேர்விற்கு சுசுகி அக்சஸ் 125 ஆனது ரூ.90,500 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது மற்றும் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஆனது ரூ.ரூ.98,299 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

சுசுகி அக்சஸ் 125 பைக்கானது 124cc 4-ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் சுசுகி ஈஸி ஸ்டார்ட் அமைப்புடன் எஞ்சின் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் சுவிட்ச் உள்ளது.

இதில் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பொசிஷன் லைட், குரோம் எக்ஸ்டெர்னல் பியூயல் லிட் மற்றும் சைடு ஸ்டாண்ட் இன்டர்லாக் சுவிட்ச் ஆகியவற்றுடன் வருகிறது.எல்இடி ஹெட்லைட், பொசிஷன் லேம்ப் மற்றும் டெயில் லேம்ப் மற்றும் பாடி மௌன்டட் விண்ட்ஸ்கிரீன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

Tags:    

Similar News