மஹிந்திரா நிறுவனத்தின் சலுகை - ஸ்கார்பியோ N !!!!

Update: 2024-04-06 11:30 GMT

மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் இந்த காருக்கான தட்டுப்பாடு இன்றும் குறையாத நிலையே தொடர்கிறது.

மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N மாடலின் 2023 வெர்ஷனுக்கு அசத்தல் சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது.

ஸ்கார்பியோ N மாடலின் டாப் எண்ட் Z8 மற்றும் Z8L டீசல் 4x4 வேரியண்ட்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த சலுகை மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட 7 சீட்டர் வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. Z8 மற்றும் Z8L டீசல் 4x2 AT வேரியண்ட்களுக்கு (6 மற்றும் 7 சீட்டர்) ரூ. 60 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தள்ளுபடி தவிர எக்சேன்ஜ் போனஸ் அல்லது கார்ப்பரேட் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை.

ஸ்கார்பியோ N மாடல் 203 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 175 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

ஸ்கார்பியோ N மாடல் ரூ. 13 லட்சத்து 60 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 24 லட்சத்து 54 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News