மஹிந்திரா நிறுவனத்தின் அசத்தல் கார் டீசர் வெளீயிடு !!
மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசரை முதல் முறையாக வெளியிட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் சர்வதேச சந்தையில் ஏப்ரல் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மேம்பட்ட புதிய சப்-4 மீட்டர் எஸ்.யு.வி. மாடலுக்கு மஹிந்திரா XUV 3XO என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும் ஒட்டுமொத்த XUV மாடல்களும் இதே போன்ற பெயர்கள் மாற்றப்படும் என எதிர்பார்ப்பு உள்ளது.
டீசரில் புதிய மஹிந்திரா XUV 3XO மாடலின் முன்புறம் புதிய தோற்றம் கொண்டு இருக்கிறது.
இவைதவிர டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புதிய ஏ.சி. வெண்ட்கள் வழங்கப்படுகின்றன.
புதிய மஹிந்திரா XUV 3XO மாடலிலும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அறிமுகமானதும் மஹிந்திரா XUV 3XO கார் அனைத்து மாடல் கார்களுக்கும் போட்டியாக அமையும் என்று தெரிகிறது.