மாருதி சுசுகி நிறுவனம் ; பாக்ஸி ஸ்டைல் மைக்ரோ எஸ்யுவி கார் !!

Update: 2024-08-13 12:30 GMT

மாருதி சுசுகி 

மாருதி சுசுகி நிறுவனத்தின் பாக்ஸி ஸ்டைல் மைக்ரோ எஸ்யுவி கார் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஹஸ்லர் எனும் பெயரில் விற்பனை செய்யப்படும் இந்த கார் தற்போது இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகிறது.அளவில் 3.3 மீட்டர்களும், 2.4 மீட்டரில் வீல் பேஸும் கொண்டுள்ள ஹஸ்லர் மாடல் தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எம்ஜி கொமெட் மற்றும் மாருதி ஆல்டோ கார்களை போன்ற அளவில் தான் இருக்கும்.

இந்த காரில் 660சிசி எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.இந்த எஞ்சின் 48 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதே எஞ்சினின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் 64 ஹெச்பி திறன் வெளிப்படுத்தும். இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் மாருதி ஹஸ்லர் மாடல் எஸ் பிரெஸ்ஸோ போன்று மைக்ரோ எஸ்யுவி பிரிவில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. இதன் விலையும் எஸ் பிரெஸ்ஸோவுக்கு நிகராகவே நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News