மாருதி சுசுகியின் கிராண்ட் விட்டாரா கார் செம ஒர்த்! துணிஞ்சு வாங்கலாம்!
இந்தியாவில் மாருதி சுசுகியின் கிராண்ட் விட்டாரா காரின் விலை நிர்ணய யுக்தி கணிசமான ஈர்த்துள்ளது. போட்டி வாகன தயாரிப்பாளர்களின் வாகன விலைக்கு ஏற்பட இந்த காரின் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ 10.45 லட்சம் முதல் ரூ 19.65 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது.
கிராண்ட் விட்டாரா காரின் சிக்மா வேரியன்ட் கார் ₹10.45 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. டாப் வேரியன்ட் ஆல்ஃபா ஆல்வீல் டிரைவ் ஹைப்ரிட் வேரியன்டின் விலை ரூ 19.65 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த விலைகள் காரின் அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பொருத்து மாறுபடுகின்றன.
கிராண்ட் விட்டாரா காரில் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா மற்றும் ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டம் போன்ற மேம்பட்ட அம்சங்கள் உள்ளன.மாருதி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா காரின் வடிவமைப்பு, வசதி மற்றும் மைலேஜ் ஆகியவற்றைப் பாராட்டி வாடிக்கையாளர்களின் பாசிட்டிவான கருத்துக்களை தெரிவித்த வருகின்றனர்.