S1 Z, S1 Z பிளஸ் ஸ்கூட்டர்களை மலிவான விலையில் அறிமுகம் செய்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் !!
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1 Z மற்றும் S1 Z பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இவற்றின் விலை முறையே ரூ. 59 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 64 ஆயிரத்து 999 என எக்ஸ் ஷோரூம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய S1 Z மற்றும் S1 Z பிளஸ் ஸ்கூட்டர்களில் கழற்றக்கூடிய பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால், ஸ்கூட்டரின் பேட்டரியை எஹ்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். இதற்காக 3- பின் சார்ஜிங் சாக்கெட் வழங்கப்படுகிறது.
ஓலா அறிமுகம் செய்திருக்கும் இரண்டு புதிய ஸ்கூட்டர்களிலும் 1.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர்கள் வரை ரேஞ்ச் வழங்குகிறது.
இந்த ஸ்கூட்டர்களில் இரண்டு பேட்டரிகள் இருப்பதால், அதிகபட்சம் 146 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் கிடைக்கும்.
இரண்டு ஸ்கூட்டர்களும் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ஸ்கூட்டரில் 2.9 கிலோவாட் ஹப் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்கூட்டர் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. இதில் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற வசதிகள் உள்ளன.