RE கொரில்லா அப்டேட் வந்தாச்சு !
Update: 2024-05-24 06:40 GMT
ஹிமாலயன் பைக்கின் இன்ஜினைக் கொஞ்சம் பட்டி, டிங்கரிங் பார்த்து RE கொரில்லா - (Guerrilla) டூவீலரைக் கொண்டு வர உள்ளது RE நிறுவனம். கொரில்லா பைக்கின் தயாரிப்பு, RE தொழிற்சாலையில் தீவிரமாக உள்ளது.
சிங்கிள் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இதில் இருக்கிறது. இது ஹிமாலயன் பைக்கில் இருக்கும் அதே TFT டிஸ்ப்ளே கொண்ட Pod பாட்தான். இதில் அதைப்போலவே ட்ரிப்பர் நேவிகேஷன் டேஷ்போர்டு கொடுக்கலாம். கூகுள் மேப் இருப்பதால் பெரிய டூர்களில் கவலைப்படத் தேவையில்லை. பெரிய பெட்ரோல் டேங்க் - கொள்ளளவு 17 லிட்டருக்கு இருக்கலாம். ஹிமாலயனில் இருக்கும் அதே Sherpa இன்ஜின் செட்அப்தான் இருக்கும். பவர் மற்றும் டார்க் போன்ற சமாச்சாரங்கள் - 40bhp மற்றும் 40Nm.
இதை இந்த ரோடு பைக்குக்கு ஏற்றபடி ட்யூன் செய்திருக்கிறதாம் ராயல் என்ஃபீல்டு.