ரெனால்ட் டஸ்டர் கார் - இந்தியாவில் அறிமுகம் எப்போ தெரியுமா ??

Update: 2024-06-04 10:40 GMT

ரெனால்ட் டஸ்டர் கார்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை டஸ்டர் காரை இந்திய மார்க்கெட்டில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான டேஸிகா நிறுவனத்தின் பேட்ஜில் இந்த கார் ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் அறிமுகம் ஆகிவிட்டது.

சர்வதேச மார்க்கெட்டில் டேஸிகா பிராண்டில் அறிமுகமான இதே கார் தான் இந்திய மார்க்கத்திற்கும் சில மாற்றங்களுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.டேஸிகா நிறுவனத்தின் பிக்ஸ்டர் தான் புதிய தலைமுறை டஸ்டர் காராக இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த கார் பாக்ஸி ஸ்டைலில் உருவாக்கப்படுகிறது. இதில் ஸ்லீக்கான ஹெட்லைட்டுகள் பெரிய ஏர் டேம் வட்டமான ஃபாக் லேம்ப்கள் ஆகிய இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் முன்பக்கம் உள்ள கிரில் பகுதியில் ரெனால்ட் என்ற நிறுவனத்தின் பெயர் பெரிதாக எழுதப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் 18 இன்ச் கொண்ட டூயல் டோன் அலாய் வீல்கள் வடிவிலான வீல் ஆர்ச்கள், ரூப் ரெயில்கள், சி பில்லரில் கொடுக்கப்பட்டுள்ள டோர் ஹேண்டில்கள், பின்பக்கம் பெரிய ஸ்கிட் பிளேட் மற்றும் ஒய் வடிவ எல்இடி டெயில் லைட்டுகள் எல்லாம் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரின் உட்புறத்தை பொருத்தவரை பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக 10.1இன்ச் கொண்ட டச்ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் வகையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக 7இன்ச் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 6ஸ்பீக்கர் கொண்ட ஆர்கேவி சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், க்ரூஸ்கண்ட்ரோல் அம்சங்களும் இந்த காரில் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன.

இதுபோக சென்ட்ரல் கன்சோல் பகுதியில் ஏசி வென்ட்கள் மற்றும் அதற்கான கண்ட்ரோல் பட்டன்கள் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கண்ட்ரோல் பட்டன்கள் உள்ளிட்டவை இடம்பெறுகிறது. காரில் செல்போன் மற்றும் லேப்டாப்பை சார்ஜ் செய்ய 12 வோல்ட் சாக்கெட்கள் மற்றும் இரண்டு டைப் சி சார்ஜிங் போர்டுகள் வழங்கப்படுகின்றன. இதனால் நீண்ட தூரம் செல்லும் போதும் செல்போனில் சார்ஜ் காலி ஆகிவிடும் என்று கவலை இல்லை.

ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனையாகும் இந்த காரில் பல்வேறு விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. முக்கியமாக இதில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டு 1.6 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 140 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எலெக்ட்ரிக் மோட்டாரை இயக்க 1.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்துடனும் இயங்குகிறது.

மற்றொரு இன்ஜின் ஆப்ஷன் ஆக 1.2லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 48வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் இயங்குகிறது. இது 130பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோக 1.0லிட்டர் பெட்ரோல் எல்பிஜி ஆப்ஷன் இன்ஜினும் இருக்கிறது. இந்த காரில் ஐந்து விதமான டிரைவிங் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரில் ஸ்னோ,ஆட்டோ, ஆஃப் ரோடு, எக்கோ மற்றும் மட் ஆகிய டிரைவ் மோடுகள் உள்ளன.

Tags:    

Similar News